நாகப்பட்டினம், நவ.15: நாகை மாவட்ட மைய நூலகத்தில் நேற்று மாவட்ட நூலக அலுவலர் சுமதி தேசிய நூலக வார விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்ட மைய நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் சுமதி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் ஜவகர் முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலகர் மீனாகுமாரி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) முத்துச்சாமி புத்தகக் கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். புலவர் சொக்கப்பன், ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை நித்தியா, ஆசிரியர் இளையராஜா, மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், நாகூர் சித்திக் சேவை தர்ம அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நாகூர் சித்திக் ஆகியோர் பேசினர். நூலகர் நிர்மலா நன்றி கூறினார்.
+
Advertisement
