நாகப்பட்டினம், அக்.30: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. எஸ்பி செல்வகுமார் தலைமை வகித்தார். இதில் 17 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி உறுதியளித்தார். மேலும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.
+
Advertisement
