நாகப்பட்டினம், அக். 30: தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏழை முதியவர்களுக்கான அறுபடை ஆன்மிக சுற்றுலா பயணம் அழைத்து செல்லப்படும் என அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் கூறினார். இதை தொடர்ந்து நடப்பு ஆண்டின் பயணம் அறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா நாகப்பட்டினம் மண்டல இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நேற்று தொடங்கியது.
இணை ஆணையர் குமரேசன் உத்தரவின்படி உதவி ஆணையர் ராஜாஇளம்பெரும்வழுதி தொடங்கிவைத்தார். நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் தமிழ்நாடு சுற்றுலாத்துறை பஸ்ஸில் பயணத்தை தொடங்கினர். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் பேருந்து சுவாமிமலை, திருத்தணி, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் உள்ளிட்ட 6 முருகன் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
