Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருக்குவளை பொறியியல் கல்லூரியில் கட்டிட மீள்தன்மை கருத்தரங்கம்

கீழ்வேளூர், ஆக. 30: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தமிழ்நாடு அறிவியல் தொழில் நூட்ப மாநில மன்ற ஆதரவோடு, பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான. ஆட்டோமேஷன் சக்தியால் கட்டிடமீள்தன்மை என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடை பெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முந்தையன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் டெல்லி கிரீன் பீஸ்டு எக்ஸ்பிரஸ்வே பிராஜெட் நிர்வாகி செந்தமிழ்மாறன், உதவி பேராசிரியர்கள் மந்திரம்கார்த்திக், இளங்கோவன் , தெய்வீகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் ராஜநந்தினி கருத்தரங்கில் கலந்து கொண்டு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதல்களை வழங்கினார்.