நாகப்பட்டினம்,ஆக.30: திருமருகல் அருகே அகரக்கொந்தகை ஊராட்சியில் சேதமடைந்த தொகுப்பு வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. திருமருகல் அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் அப்பகுதி பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
வீடுகள் முழுவதும் சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்பிரமணியன் சேதமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுப்பு செய்து வீடுகளை புதுப்பிக்க பரிந்துரை செய்வதாக கூறினார்.