சீர்காழி, ஆக. 29: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சீர்காழி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள கமல்ராஜ்க்கு தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பொதுச் செயலாளர் துரைராஜ், துணைத் தலைவர்கள் ஜெக. சண்முகம், உமையாள்பதி ரவிச்சந்திரன், கோவி. நடராஜன். சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் இராம. சிவசங்கர்,நிர்வாகிகள் முருகவேல், தில்லை நடராஜன், செம்மங்குடி அசோகன், பாலமுருகன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.