கொள்ளிடம், ஆக. 29: கொள்ளிடம் அருகே பச்சபெருமாள் நல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 625 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பச்சபெருமாள் நல்லூரில் ஆர்ப்பாக்கம், உமையாள் பதி, மகாராஜபுரம், மாதானம் பச்சபெருமாள் நல்லூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் நேற்று நடைபெற்றது. முகாமை சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் தியாகராஜன், ஒன்றிய ஆணையர் ஜான்சன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், பத்மபாலாஜி, ஊராட்சி செயலாளர்கள் கீதா, இளையபெருமாள், ரமேஷ், மாரிமுத்து, வெற்றிவேந்தன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 625 மனுக்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.