நாகப்பட்டினம்,ஆக.29: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவிற்கு நடைபயணமாக வந்த யாத்ரீகர்களுக்கு நாகூர் தர்காவில் உணவு வழங்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று(29ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் நடைபயணமாக நீண்ட தூரங்களில் இருந்து வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் யாத்ரீகர்கள் நாகூர் ஆண்டர் தர்காவில் இளைப்பாறினர். சிலர் இரவு நேரங்களில் தங்குகின்றனர். இவ்வாறு நாகூர் ஆண்டவர் தர்காவில் தங்கிய யாத்ரீகர்களுக்கு இரவு உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.