சீர்காழி, ஆக.27: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் டி இ எல்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள சத்துணவு கூடத்தில் மதிய உணவு சமைக்கும்போது திடீரென்று கேஸ் சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டர் தீ பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக தகவல் அறிந்த பூம்புகார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்துள்ளன. விரைவாக நடவடிக்கை எடுத்ததால் அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. இந்த சம்பவம் குறித்து திருவெண்காடு இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.