நாகப்பட்டினம், ஆக.21: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தின் போது, எஸ்பி செல்வக்குமார் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து எஸ்பி 18 மனுக்களை பெற்றார்.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எஸ்பி உறுதியளித்தார். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் நடைபெறும் என்றும், இ்நத முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எஸ்பி அறிவுறுத்தினார்.