சீர்காழி, செப். 19: சீர்காழி சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழைதொடங்கி பெய்து கொண்டிருந்தது, இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி கல்லூரி சென்று திரும்பிய மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
திடீர் மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டன. தோட்ட பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும், எனவும் சம்பா நடவு பணிகளுக்கு வயலை சீர் செய்ய இந்த மழை உதவும், என விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக பொதுமக்களை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையால் மக்களின் மனம் குளிர்ந்து உள்ளது.