நாகப்பட்டினம்,செப்.19: டாக்டர் அம்பேத்கர் விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கு டாக்டர் அம்பேத்கர் விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ளவர்கள் தங்களைப் பற்றி முழு விவரங்களுடன் https://cms.tn.gov.in/cmsmigrated/document/forms/annalambedkar_award_applnform-t290824.pdf (or) https://tinyurl.com/ambedkaraward என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், சென்னை- அல்லது நாகப்பட்டினம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தகுந்த ஆதரங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.