சீர்காழி, செப். 18: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் 147வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழக சீர்காழி நகர தலைவர் ரகுநாத் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக கொள்ளிட ஒன்றிய தலைவர் பாக்யராஜ் வரவேற்றார். பெரியார் மாணவர் கழக பொறுப்பாளர்கள் வினோத் ராகுல், வருண், விஷ்ணு, கபின் முன்னிலை வகித்தனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழக டெல்டா மண்டல செயலாளர் பெரியார் செல்வம், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் பரசுராமன், பகுத்தறிவாளர் கழக சீர்காழி நகர செயலாளர் வெண்மணியழகன் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட மாவட்ட செயலாளர் பார்த்திபன் சீர்காழி ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி, சீர்காழி நகரத் தலைவர் மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழக சீர்காழி ஒன்றிய கொள்ளிட ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.