செம்பனார்கோயில், அக்.17: ஆக்கூர் ஓரியண்டல் அரபி அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி 11ம் வகுப்பு மாணவி தமிழ்வளர்ச்சிதுறை நடத்திய பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்றார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக 11ம் மற்றும் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் ஓரியண்டல் அரபி அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி சஜிதா பங்கேற்று வெற்றி பெற்றார்.
இவருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் பெற்று மாநில அளவில் நடைபெறும் பேச்சு போட்டிக்கு தேர்வாகியுள்ளார். வெற்றிபெற்ற மாணவி சஜிதாவைபள்ளி தலைமையாசிரியர் ஷாஜஹான், செயலாளர் முகம்மது சாதிக், தாளாளர் சலாஹுதீன், ஆக்கூர் நிர்வாக சபை தலைவர் முஹம்மது சித்திக் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.