சீர்காழி, அக்.17: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வைத்தீஸ்வரன்கோவில் இந்தியன் வங்கியின் மேலாளர் சஞ்சீவிகுமார் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து மாணவர்களின் செய்முறைகளை பார்வையிட்டார்.
பள்ளி செயலர் பாஸ்கரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 120 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் கீதா, சோனியாகாந்தி நடுவர்களாக கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர். பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சியைபார்வையிட்டனர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மன்ற ஆசிரியர்கள் செய்திருந்தனர்.