தரங்கம்பாடி, அக்.17: தரங்கம்பாடி, பொறையார் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்திடம், சமூக செயற்பாட்டாளரும், விசிக மாநில துணைச்செயலாளருமான ஆயப்பாடி முஜிபுரஹ்மான் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மற்றும் பொறையாரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலையை உருவாக்கவேண்டும். டெங்கு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்களிடமிருந்து மனிதர்களை பாதுகாக்க உரிய சிகிச்சையை போர்க்கால நடவடிக்கையாக எடுக்கவேண்டும். அரசு மருத்துமனைகளில் அடிப்படை வசதிகளை சீர்செய்து மருத்துமனை சுகாதாரத்துடன் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.