சீர்காழி, செப். 17: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி வார்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகராட்சி வார்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் 13 துறை சார்ந்த கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களாக பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் குடும்பத் தலைவிகளால் அளிக்கப்பட்டு உடனடியாக மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த முகாமினை சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட துணை வட்டாட்சியர் பாபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்காணிப்பாளர் பத்மநாப செல்வி , மண்டல துணை வட்டாட்சியர் ரகு வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன கிருஷ்ணன், சங்கீதா, பிரசன்யா, நம்பிராஜன்,குபேந்திரன்,திமுக நகர செயலாளர் சுப்பராயன், நகர மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன்,ராமு,முபாரக் அலி, கலந்து கொண்டனர்.