நாகப்பட்டினம், ஆக.15: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் இன்று சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை கிராம சபை பார்வைக்கு ஒப்புதல் பெறுதல் தூய்மையான குடிநீர் விநியோகத்திற்கான உறுதி செய்வது தொடர்பான கிராம சபை கூட்டம் நடைபெறும் . எனவே இக்கிராம சபை கூட்டத்தில் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
+
Advertisement