காரைக்கால், அக்.13: காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்க பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று முஸ்லிம் வித்தியா சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காரைக்கால், முஸ்லிம் வித்தியா சங்கத்தின் 40 வது பொதுச்சபை கூட்டம் பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தற்காலிக தலைவர் மற்றும் தேர்தல் அதிகாரி டாக்டர் இல்முதீன் மரைக்கார் தலைமை வகித்தார். முஹம்மது காசிம் மன்பயி கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பொறியாளர் ஹாஜா மொய்னுதீன் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் பேராசிரியர் உமர்ஹத்தாப் ஆண்டறிக்கைவாசித்தார். தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஹாஜா சமர்ப்பித்தார்.புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது, அதில், தலைவராக ஆடிட்டர் சாஹுல் ஹமீது, துணை தலைவராக டவுன் காஜியார் ஆரிப், செயலாளராக பேராசிரியர் உமர் ஹத்தாப், துணை செயலாளராக மஸ்தான் அப்துல் காதர் ,
பொருளாளராக செய்யது அஹமது ஆகியோரும் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களாக ஹாஜா, வழக்கறிஞர் ஹபீப் முஹம்மது, முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட பலர் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் டாக்டர் ஷாஹுல் ஹமீது மரைக்காயர் நன்றி கூறினார்.