கீழ்வேளூர், அக்.13: நாகப்பட்டினம்மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த தேவூரில் தேவ துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்யும், மஹா மிருத்துஞ்சய யாகத்தை முன்னிட்டு சிறப்பு யாகக் குண்டம் அமைக்கப்பட்டு 108 சமித்துகள், மூலிகை திரவியங்கள், பட்டு, பழம், வஸ்திரங்கள் கொண்டு சிறப்பாக யாகம் நடத்தப்பட்டது. பூர்ணாஹூதியை முன்னிட்டு கடத்தில் புறப்பாடு நடைபெற்று புனித நீர் கொண்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
+
Advertisement