கீழ்வேளூர்,அக். 13: நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒள்ளிடம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல்,ஆண்டு விழா விளையாட்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது.பள்ளியின் தலைமையாசிரியர்கை.கயிலைராஜன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்.அம்பிகா,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேதாச்சலம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், கலைத்திறன் பயிற்றுநரும் நாட்டுப்புறப் பாடகருமான தென்னடார் அம்பிகாபதி பங்கேற்று \”தமிழ் மொழியும் வாய்மொழி இலக்கியமும் \” என்ற தலைப்பில் பேசினார். தமிழ்க் கூடல் நிகழ்வுக்காக நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தமிழாசிரியர் சு. மஞ்சுளா பட்டதாரி ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.