சீர்காழி,செப்.13: சீர்காழி அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார். மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அருகே நிம்மேலி சம்புராயர் கோடங்குடி பகுதியில் வசிப்பவர் நடராஜன். இவரது மனைவி கொளஞ்சி ஆயாள்(45). இவர் நேற்று மாலை தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்த தனக்கு சொந்தமான ஆடுகளை பிடிக்க சென்றார். அப்போது திடீரென்று இடி மின்னல் ஏற்பட்டது.
இதில் மின்னல் தாக்கியதில் கொளஞ்சி ஆயாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றிய தகவலறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொளஞ்சி ஆயாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போ லீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகின்றனர்.