கீழ்வேளூர் செப் 13: நாகை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் கே.எம்.எஸ் 2025-2026 குறுவை பருவத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருவதாலும், மேலும் தேவைக்கேற்ப நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 15.09.2025 முதல் திறக்கப்பட உள்ளதாலும் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ், கேட்டுக்கொண்டுள்ளார்.
+
Advertisement