மயிலாடுதுறை, அக். 12: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காணொலி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.மயிலாடுதுறை தாலுகாகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அது போல், மனக்குடி, வடகரை, கோடங்குடி, அகரங்குடி, குளிச்சாரு, மண்னம் பந்தல் ஆகிய பகுதிகளிலும், பல்வேறு அரசு அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் வருகின்ற பருவ மழையை எதிர்கொள்வது பற்றியும், டெங்கு காய்ச்சலை தடுப்பது பற்றியும், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகளை எடுத்து கூறி, அதை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றினர்.
+
Advertisement