குத்தாலம்,அக்.12: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருவாலங்காடு, மல்லியம், தேரழுந்தூர், மங்கநல்லூர், கோமல், கண்டபுரம், எஸ்.புதூர், பாலையூர், கோனேரிராஜபுரம் என பல்வேறு பகுதிகளிலும் நேற்று மதியம் தொடங்கிய கன மழையானது, பலத்த காற்றுடன் பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாய பணிகளும்,செங்கல் சூளை பணிகளும், அன்றாட வேலைக்கு சென்று வரும் பொது மக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.அதுமட்டுமல்லாமல் விவசாய நிலங்களில் சம்பா நடவு நடைபெற்று வரும் நிலையில் இந்த மழை பெய்வதால் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோமல்,செம்பியன்கோமல், கங்காதரபுரம் உள்ளிட்ட இடங்களில் பயிர்கள் மழை நீரில் மூழ்காமல் இருப்பதற்கு அங்குள்ள சிறு சிறு பாசன மற்றும் வடிகால் வகைகளை தூர் வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement