குத்தாலம்,செப்.12: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், மங்கநல்லூர் அருகே ஆடுதுறை பொறையார் பிரதான சாலை பெரம்பூர் பகுதியில் சாலையின் குறுக்கே வளைந்த தென்னை மரம் ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த தென்னை மரம் வெடிப்பு விழுந்த நிலையில் உள்ளதால் மேலும் இந்த பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அதிக அளவில் காற்று மற்றும் எதிர்வரும் பருவம் மழை காலங்களில் முறிந்து விழுந்தால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படும் முன்னர் தென்னை மரத்தினை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.