நாகப்பட்டினம், செப். 11: நாகப்பட்டினம் அருகே மீனவரின் வலையில் சிக்கிய மண்ணுளிப் பாம்பு பத்திரமாக மீட்டு சவுக்கு காட்டில் மீனவர்கள் விட்டனர். நாகப்பட்டினம் அருகே நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபன். இவர் மீன்பிடி தொழிலுக்கு சென்றுவிட்டு தனது வலையை கடற்கரையோரம் போட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மீன்பிடி தொழிலுக்கு செல்ல வலையை எடுப்பதற்காக கடற்கரைக்கு வந்தனர்.
அப்போது அவரது வலையில் 3 கிலோ எடை கொண்ட மண்ணுளிப் பாம்பு சிக்கியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் சக மீனவர்களின் உதவியோடு வளையில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்த மண்ணுளிப் பாம்பை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து வலையிலிருந்து மீட்கப்பட்ட மண்ணுளிப்பாம்பை அருகில் இருந்த சவுக்கு தோப்பிற்குள் பத்திரமாக விட்டனர்.