நாகப்பட்டினம், செப். 11: நல்லாசிரியர் விருது பெற்ற சிக்கல் அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தலைமை வகித்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது நாகப்பட்டினம் அருகே சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை வரலாறு ஆசிரியர் புஷ்பராஜ்க்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவம் பொறித்த பதக்கத்தை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் அணிவித்தார். இவ்வாறு நல்லாசிரியர் விருதுபெற்ற புஷ்பராஜை முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.