காரைக்கால், செப்.10: காரைக்கால் மாதா கோயில் வீதி தனியார் பேப்பர் மார்ட் அருகே நேற்று மதியம் 3 பவுன் மதிப்புடைய தங்க சங்கிலியொன்று கிடந்துள்ளது. இதனை அப்பகுதியாக சென்ற தமுமுக நிர்வாகிகள் உடனடியாக தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம்மிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் ஆலோசனையின் பேரில் உடனடியாக காரைக்கால் சிறப்பு காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் முன்னிலையில் காரைக்கால் தெற்கு காவல் கண்காணிப்பாளர் முருகையன்(பொ) வசம் தமுமுக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஷெரீப் தலைமையில் மாவட்ட பொருளாளர் மெய்தீன் ஐபிபி, மாவட்ட செயலாளர் சிக்கந்தர், நகர செயலாளர் இக்பால் விளையாட்டு அணி செயலாளர் ஹபீப்ரஹ்மான் ஆகியோர் ஒப்படைத்தனர். தமுமுகவினரின் இந்த செயலை பாராட்டி காரைக்கால் தெற்கு காவல் துறை கண்காணிப்பாளர் முருகையன் (பொ) பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் தனது துறையின் சார்பாக பாராட்டையும் தெரிவித்தார்.
+
Advertisement