வேதாரண்யம், செப்.10: வேதாரண்யத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியில் 48 சதவீத உறுப்பினர்களை இணைத்த வேதாரணயம் மேற்கு ஒன்றிய செயலாளர்உதயம் முருகையனைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டினார். தமிழக முழுவதும் ஓரணையில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது . இந்த உறுப்பினர் சேர்க்கையில் வேதாரண்யம் மேற்கு ஒன்றியத்தில் நிர்ணயிக்கப்பட்ட 40 சதவீத பணிகளை கடந்து 48சதவீதம் உறுப்பினர்களை கட்சியில் இணைத்து பணி செய்துள்ளார் .இவ்வாறு உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரமாக ஈடுபட்ட வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுகசெயலாளர் உதயம்முருகையினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிபாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் இருந்தார்.
+
Advertisement