350க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
நாகப்பட்டினம், அக். 9: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை(10ம் தேதி) தனியார் நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்களில் வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை(10ம் தேதி) காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் நாகப்பட்டினம் மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திலுள்ள காலி பணியிடங்களுக்காக 500-க்கு மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்யப்பட உள்ளது.
18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 5ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ., உட்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கி கடன் வசதி, அயல்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் கான்ஸ்டபிள் எழுத்து தேர்வு குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரஅறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.