மயிலாடுதுறை, டிச.8: மயிலாடுதுறையில் டிசம்பர் 6ம் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கருதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கருதி மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை, வழிபாட்டுரிமை உள்ளிட்ட அரசியல் சாசனம் தந்துள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாத்திட வலியுறுத்தி மயிலாடதுறையில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோளில் கருப்பு துண்டு அணிந்து கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை மாவட்ட தமுமுக தலைவர் முகமது ஹாலித் தலைமையிலும் அமீன்முபாரக் அலி முன்னிலையில் நடைபெற்றது. கட்சியின் துணை பொது செயலாளர் வழக்கறிஞர் பாதுஷா, பொதக்குடி ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


