கொள்ளிடம், அக்.8: கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியில் கலை திருவிழாவை முன்னிட்டு விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழாவை முன்னிட்டு நேற்று விவாதமேடை, தனிப்பாடல், வாத்தியஇசை மற்றும் தனிநடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கல்லூரி முதல்வர் சசிகுமார் தலைமை வகித்தார்.
நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.பேராசிரியர்கள் சுரேஷ், ஸ்ரீபிரியா, பிரின்ஸ், அனுசுயா ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். டிவி புகழ் அபிநவ்குமார், இசைஆசிரியர் வீரபாண்டியன், சத்தியமூர்த்தி, கணேசன், அண்ணாமலை பல்கலைக்கழக இசைக்கல்லூரி ஆய்வாளர் ஹரிஷ், கணிதத்துறை ராஜேஸ்வரி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இருபால் மாணவர்களும் கலந்து கொண்டு அவர்களின் திறமை வெளிப்படுத்தினர்.