சீர்காழி, அக்.7: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 நாட்கள் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் மாணவர்கள் பல்வேறு சமூக பணியில் ஈடுபட்டனர். பள்ளி தலைமையாசிரியர் ராஜா தலைமையில் நடந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்புசெழியன், உதவி தலைமையாசிரியர் முருகபாண்டியன், திட்ட அலுவலர் ராஜா, உதவி திட்ட அலுவலர் இராமமூர்த்தி, ஆசிரியர்கள் சுரேஷ், அருள், முருகராஜ், சசிகலா, சாந்தி, பிரதாப், சங்கர், ரமேஷ்குமார், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா நிறைவு நாளில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் விஜய் அமிர்தராஜ், சக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையிட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினர். மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நிறைவு பெற்ற இவ்விழாவில் திட்ட உதவி அலுவலர் இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.