நாகப்பட்டினம், நவ.6: கீழையூர் கிழக்கு ஒன்றியம் பிரதாபராமபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் பார்வையிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் முதல் வீடுவீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி கீழையூர் கிழக்கு ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த படிவம் வழங்கப்பட்டது. இதை கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் பிஎல்ஏ 2 உடன் சென்று பார்வையிட்டார்.
