வேதாரண்யம், ஆக.6: வேதாரண்யம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் முகாமில் இடம் பெற்றிருந்தன. இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டி 25க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இம்முகாமில் கோட்டாட்சியர் திருமால், வட்டாட்சியர் வடிவழகன், வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகைக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்குரிய ஆவணங்களை பயனாளிகளிடம் வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி முகாமில் வழங்கினர்.