நாகப்பட்டினம், ஆக.6: நாகப்பட்டினம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் கல்லூரி தொடக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முதல்வர் அஜிதா தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான அன்வர் அஹமது வரவேற்றார். தமிழ் துறை தலைவர் மதியரசன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராமு பேசினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் சின்னதுரை, வணிகவியல் துறை பேராசிரியர் சீனிவாசன், வணிக மேலாண்மை துறை பேராசிரியர் செல்வகுமாரி, ஆங்கிலத்துறை பேராசிரியர் சந்தானலெட்சுமி, கணிதவியல் துறை பேராசிரியர் சுகன்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் துறை பேராசிரியர் மனோகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் ரம்யா நன்றி கூறினார்.