சீர்காழி, நவ. 5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூர் அறிவியல் மன்றத்தின் சார்பில் பனை மரம் வளர்த்தல் விழிப்புணர்வு மற்றும் நாங்கூர் திருப்பாற்கடல் பகுதியில் பனை விதைகள் நடவு பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பசுமை சேவை சங்க தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பாலமுரளி ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாங்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரிதா அறிவியல் மன்ற பொறுப்பாசிரியர் உமாராணி வேளாண் ஆசிரியர் இன்பராஜ் , சக்கரவர்த்தி, ராஜேஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement
