மயிலாடுதுறை, நவ. 5: மத நல்லிணகத்தை போற்றும் விதமாக 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தருமை ஆதீனத்தின் மணிவிழாவை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மயிலாடுதுறையில் தருமை ஆதீன கலை கல்லூரியில் தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருவிழா மணிவிழா நடைபெற்று வருகிறது.
இதை முன்னிட்டு மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூரை சேர்ந்த முஸ்லிம் ஜமாத்தார்கள் முத்தவல்லிகள் மற்றும் 200 க்கு மேற்பட்ட இஸ்லாமியர் வருகை தந்து தருமை ஆதீன 27-வது குருமகா சன்னிதானத்தை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து ஆதீன மடாதிபதியின் அருளாசி பெற்றனர்.
