நாகப்பட்டினம், நவ. 5: நாகப்பட்டினம் நகர பகுதியில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த படிவம் வழங்கும் பணி தொடங்கியது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்யும் பணி நேற்று(4ம் தேதி) தொடங்கியது. இதற்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் கவுன்சிலர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் லோகநாதன், நகர துணை செயலாளர் சிவா மற்றும் திமுகவினர் நாகப்பட்டினம் நகர பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று தீவிர வாக்காளர் திருத்த படிவம் மற்றும் திமுக தலைமை இடத்திற்கு அனுப்ப வேண்டிய படிவம் உள்ளிட்ட படிவங்களை வழங்கும் பணியை தொடங்கினர்.
