கீழ்வேளூர், அக்.4: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வம் வரவேற்றார்.விழாவிற்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தலைமை தாங்கி தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார். விழாவில் 12,-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி மீனாட்சி பரிசு வழங்கி பாராட்டினார்.
நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மரக்கன்றுகள் நடுதல்,மாணவர்களுக்கு யோகா மற்றும் உடல் நலம் பயிற்சி , மது,போதை பற்றிய விழிப்புணர்வு பேரணி சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம், கோர்ட் வளாகம் தூய்மை பணி நடைபெற்றது.இதில் மணக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், புரவலர் முரளிகிருஷ்னண், நல்லாசிரியர் ரவி, ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் முருகேசன், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.