கொள்ளிடம், நவ.1: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூரில் இயங்கி வரும் சீனிவாசா சுப்பராயா பாலிடெக்னிக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதிக அளவில் மாணவர்களும், ஆசிரியர்களும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு அதிக எண்ணிக்கையிலான ரத்த அலகுகள் வழங்கி மயிலாடுதுறை மாவட்டத்திலேயே முன்னோடி கல்லூரியாக விளங்கியமைக்காக, 2025 ம் ஆண்டிற்கான சிறந்த விருது கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட அளவிலான விருது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவராலும், மாநில அளவிலான விருது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சராலும் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ரத்ததான முகாம்கள் நடத்தி மாநிலத்திலேயே அதிக ரத்தம் வழங்கியதை பாராட்டி, இக்கல்லூரியின் இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் தாமரைச்செல்விக்கு மாநில அளவிலான சிறந்த குருதி கொடையாளர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவிளான குருதி கொடையாளர் விருதைப் பெற்றுள்ள தாமரைச்செல்விக்கு கல்லூரி முதல்வர் குமார் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் ஊழியர்கள் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
