நாகப்பட்டினம், ஆக.3: நாகப்பட்டினத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் அஞ்சல் துறையின் சேவைகளை அறிந்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோட்ட கண்காணிப்பாளர்ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் நாகப்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் வரும் 11ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் அஞ்சலத்துறையின் ஆதார், சேமிப்பு கணக்கு, காப்பீடு போன்ற பல்வேறு சேவைகளை அறிந்துகொள்ளும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் அஞ்சல் துறை சேவைகளை அறிந்துகொள்ளவும், பெறவும் அரங்கை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+