கீழ்வேளூர், ஆக.4: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் சார்பில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்த பரப்புரை நடைபெற்றது. மத்திய அரசின் போலி(ஜூம்லா) பொய்யான தகவல்களும் அதன் உண்மை நிலையும் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட புத்தகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் மாநிலச் செயலாளர் வேதரத்தினம்...
கீழ்வேளூர், ஆக.4: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் சார்பில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்த பரப்புரை நடைபெற்றது. மத்திய அரசின் போலி(ஜூம்லா) பொய்யான தகவல்களும் அதன் உண்மை நிலையும் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட புத்தகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் மாநிலச் செயலாளர் வேதரத்தினம் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் வணிகர்கள் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் வழங்கினர். இந்த புத்தகத்தில் மத்திய அரசின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.