Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.1,40,000 மீட்டுதர கோரிக்கை மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மயிலாடுதுறையில் சுகாதார பேரவைக் கூட்டம்: கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை, செப். 30: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் காந்த் தலைமையில், எம் எல் ஏ நிவேதா முருகன்,பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின் அடிப்படையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுகாதார பேரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இச்சுகாதார பேரவைக் கூட்டத்தில், மருத்துவத் துறையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ சேவைகளுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில், இன்றைய கூட்டம், மாவட்ட கலெக்டர் காந்த், தலைமையில், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வட்டாரங்கள் வாரியாக வட்டார மருத்துவ அலுவலர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த தேவையான கட்டமைப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்களைத்தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (சுகாதாரத் துறை) பானுமதி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி. சுகாதார துறை துணை இயக்குநர் அஜீத் பிரபுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.