சீர்காழி, செப். 30: சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றின் கரைகளில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பனை விதை நடும் பணியில் ஈடுபட்டன. தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படும் நாட்டு நல பணி திட்ட மாணவர்களின் சமூக பணியான ஆற்றங்கரை கறையா வண்ணமும் பனை மரத்தை பாதுகாக்கும் வகையில் ஆற்றங்கரையில் பனை விதைகளை நடுகின்ற நிகழ்வினை தமிழக கல்வித்துறை கையில் எடுத்துள்ளது.
இந்தப் பணியின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமை படை , தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், ஜூனியர் ரெட் கிராஸ் சங்கம் ஆகிய பள்ளி இயக்கங்கள் ஒன்றாக இணைந்து சட்டநாதபுரம் உப்பனாற்றின் கரையில் 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர், இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன் தலைமை வகித்தார் , பள்ளி உதவி தலைமை ஆசிரியர் . துளசிரங்கன் மூத்த முதுகலை ஆசிரியர். முருகபாண்டியன் முன்னிலை வகித்தனர் சீர்காழி கல்வி மாவட்ட நாட்டு நல பணித்திட்ட தொடர்பு அலுவலர் விஜய் அமிர்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதை நடவு செய்கின்ற நிகழ்வினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் வாசுதேவன், சிவகுமார், ரமேஷ், .கண்ணன். தேசிகன், திருநாவுக்கரசு பொறியாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர், நிறைவாக நாட்டு நல பணித்திட்ட அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.