நாகப்பட்டினம்,அக்.29: இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
+
Advertisement
