நாகப்பட்டினம், செப்.22: நாகப்பட்டினத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
நாகப்பட்டினம் சௌந்திரராஜபெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும். திரு மங்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தலம் ஆகும். நான்கு யுகங்களிலும் வழிப்பட்ட தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலம்.
ஆதிசேஷன் வழி பட்டதால்தான் நாகன்பட்டினம் என்றிருந்து பின்னர் நாகப்பட்டினமாக மருவியதாக புராணம் கூறுகிறது. திராதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த தலம். துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவ மிருந்த தலம். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற நாகப்பட்டினம் சௌந்திரராஜபெருமாள் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் ஏராளமான வந்து செல்கின்றனர். அதிலும், புராட்டாசி மாதங்களில் சௌந்திரராஜபெருமாள் கோயிலில் கூட்டம் அதிமாக காணப்படும். இவ்வாறு, வருகை தரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதால் நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டது.