மயிலாடுதுறை, ஆக. 19: சட்ட விரோதமாக காரைக்கால் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மயிலாடுதுறையில் நேற்று அதிகாலை பெரம்பூர் காவல் சரகம், கொடிவிளாகம் அருகே மயிலாடுதுறை உட்கோட்ட தனிப்படையினர் மதுவிலக்கு தொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பனங்குடி காலனி தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் எழிலரசன்(25) என்பவர் காரைக்கால் பகுதியில் இருந்து பைக்கில் பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்துள்ளார். வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சித்த நபரை போலீசார் பிடித்து சோதனையிட்ட போது, 180 மி.லி. அளவுள்ள பாண்டிச்சேரி சாராயம் உள்ளடங்கிய 400 பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
+
Advertisement