நாகப்பட்டினம், ஆக. 12: ராகுல்காந்தியை கைது செய்த பிரதமர் மோடியை கண்டித்து நாகூர் புதிய பஸ்ஸ்டாண்டில் சாலை மறியல் போராட்டம் செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை வகித்தார். மாநில செயலாளர் நெளஷாத் முன்னிலை வசித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். ராகுல்காந்தியை கைது செய்த பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி நாகூர் புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே நாகப்பட்டினம் நாகூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போரட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நாகூர் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் 15 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
+
Advertisement